1996 தேவகவுடா பாணியில் விஜய்… டெல்லியையே மிரள வைக்கும் தவெக-வின் 100 சீட் மேஜிக் ஃபார்முலா அம்பலம்.. விஜய்யை பிரதமராக்க திரைக்குப் பின்னால் நடக்கும் ரகசிய ஆபரேஷன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

1996 தேவகவுடா பாணியில் விஜய்… டெல்லியையே மிரள வைக்கும் தவெக-வின் 100 சீட் மேஜிக் ஃபார்முலா அம்பலம்.. விஜய்யை பிரதமராக்க திரைக்குப் பின்னால் நடக்கும் ரகசிய ஆபரேஷன்..!!

Published

on

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய்யை 2029 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பான விவாதங்கள் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் இதற்கு அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், தவெக தரப்பிலிருந்து இந்தத் திட்டம் குறித்து மிகத் தெளிவான, ஆழமான காரணங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ராகுல் காந்தியை பிரதமராக்குவதற்காக தவெக தொடங்கப்படவில்லை என்றும், தங்களுக்கு என்று தனித்துவமான கொள்கைகளும் செயல் திட்டங்களும் இருப்பதாகவும் தவெக மூத்த நிர்வாகிகள் வெளிப்படையாகவே பேசத் தொடங்கியுள்ளனர். விஜய்யின் இந்த தேசிய அரசியல் நகர்வுக்கு வரலாற்று உதாரணம் ஒன்றை தவெகவினர் சுட்டிக்காட்டுகின்றனர். 1996-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஜனதா தளம் கட்சி வெறும் 46 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான அசாதாரண அரசியல் சூழல் மற்றும் கூட்டணிக் கணக்குகள் காரணமாக, அக்கட்சியின் தலைவர் தேவகவுடா நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

Advertisement

அதேபோன்ற ஒரு அரசியல் மாற்றம் மற்றும் வாய்ப்பு 2029-ல் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக தவெக தலைமை கணக்கு போடுகிறது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாநிலங்கள் மற்றும் தேசிய அளவில் தீவிரமாகப் பணியாற்றி சுமார் 100 இடங்களை தவெக கைப்பற்றினால், மத்தியில் உருவாகும் கூட்டாட்சி சூழலில் விஜய் பிரதமர் ஆவதற்கான கதவுகள் தானாகவே திறக்கும் என்பது அக்கட்சியின் வியூகமாக உள்ளது.

இந்த தேசிய அரசியல் இலக்கை எட்டுவதற்கு, கட்சியின் அடையாளத்தை மாநில எல்லைகளைத் தாண்டி விரிவுபடுத்துவது அவசியம் என தவெக கருதுகிறது. தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தனது தெலங்கானா ராஷ்டிர சமிதி என்ற கட்சியின் பெயரை பாரத் ராஷ்டிர சமிதி என தேசிய அளவில் மாற்றியதைப் போலவே, தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரை தேசிய வெற்றி கழகம் என மாற்ற கட்சிக்குள் தீவிர ஆலோசனைகள் நடந்து வருவதாக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மாநிலக் கட்சி என்ற குறுகிய வட்டத்தை உடைத்து, தேசிய அமைப்பாகப் பதிவு செய்து களம் இறங்கினால் மட்டுமே அண்டை மாநிலங்களிலும் பிற பகுதிகளிலும் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் இந்த பெயர் மாற்றத் திட்டம் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

சமீபகாலமாக வட மாநிலங்களில் இந்தி சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் முதலமைச்சர் விஜய் குறித்து பரப்பப்படும் விளம்பரங்கள் மற்றும் வீடியோக்களுக்குப் பின்னணியில் இந்த 2029 பிரதமர் திட்டமே பிரதானமாக உள்ளது. இந்தி பேசும் மக்களிடையே இப்போதிருந்தே விஜய்யின் ஆளுமையை ஒரு தேசிய மாற்றாகக் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம் என்று கூறப்படுகிறது.

Advertisement

கூட்டணியில் இருக்கும் காங்கிரஸுக்கு இந்த நகர்வு அதிர்ச்சியை அளித்தாலும், தேசிய அளவில் தென்னிந்தியாவின் உரிமைக் குரலாகவும், ஒரு வலிமையான தலைவராகவும் விஜய்யை நிலைநிறுத்த தவெக எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, இந்திய அரசியல் களத்தில் புதிய எதிர்பார்ப்புகளையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in