“டேய் மச்சான் வாடா” ஒவ்வொரு நண்பனுக்கும் மெசேஜ் அனுப்பி அழைத்து… சுயநினைவிழந்த பெண்ணை அடுத்தடுத்து சீரழித்த 3 மாணவர்கள்… நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..! – cinefeeds
Connect with us

CRIME

“டேய் மச்சான் வாடா” ஒவ்வொரு நண்பனுக்கும் மெசேஜ் அனுப்பி அழைத்து… சுயநினைவிழந்த பெண்ணை அடுத்தடுத்து சீரழித்த 3 மாணவர்கள்… நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..!

Published

on

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 18 வயதிற்குட்பட்ட ஒரு இளம் பெண், 17 வயதுடைய மூன்று மாணவர்களால் திட்டமிட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி, குற்றம் சாட்டப்பட்ட முதல் மாணவன் அந்தப் பெண்ணை நட்பு ரீதியாகக் கால்பந்து விளையாட்டுக்கு அழைத்துச் சென்று, பின்னர் மதுபானம் வாங்கிக் கொடுத்துள்ளார். இதில் சுயநினைவை இழந்த சிறுமியைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அந்த மாணவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

அத்தோடு நிறுத்தாமல், அந்த முதல் மாணவன் தனது நண்பர்கள் இருவருக்கு அடுத்தடுத்து மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பி தன் வீட்டிற்கு வரவழைத்துள்ளான். அந்தச் செய்தியைப் பார்த்து வந்த இரண்டாவது மாணவனும் அச்சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளான். பின்னர், இவ்விருவரும் தங்களது மூன்றாவது நண்பனிடம் இதுகுறித்துத் தற்பெருமையாகப் பேசியதைக் கேட்டு, அவனும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்தப் பெண்ணின் சம்மதமின்றி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளான்.

Advertisement

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களில் இருவர் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற செயின்ட் கிரிகோரி கல்லூரி மாணவர்கள் ஆவர். இந்த வழக்கு சிட்னி சிறுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்‌கின் முக்கியக் குற்றவாளியான முதல் மாணவன் ஜாமீன் கோரவில்லை. இந்தச் செயலைக் கடுமையாகச் சாடிய நீதிபதி, மற்ற இரு மாணவர்களுக்கும் கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in