“என்னப்பா இது அநியாயமா இருக்கு… கொஞ்சமாவது அறிவிருக்கா உங்களுக்கு..?” ராஜஸ்தான் ஹைவேயை பிக்னிக் ஸ்பாட்டா மாத்திய குடும்பம்… கண்டபடி திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னப்பா இது அநியாயமா இருக்கு… கொஞ்சமாவது அறிவிருக்கா உங்களுக்கு..?” ராஜஸ்தான் ஹைவேயை பிக்னிக் ஸ்பாட்டா மாத்திய குடும்பம்… கண்டபடி திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்…!!

Published

on

ராஜஸ்தானில் சமீபத்தில் திறக்கப்பட்ட எக்ஸ்பிரஸ்வே சாலையில், பேருந்தை நிறுத்திவிட்டு ஒரு பெரிய குடும்பத்தினர் தார்ப்பாய் மற்றும் நாளிதழ்களை விரித்து நடுரோட்டில் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். சிவ் மகேஸ்வரி என்பவரால் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு, பின்னர் எக்ஸ் தளத்திலும் பரவிய இந்த வீடியோவில், குடும்ப உறுப்பினர்கள் சாலையில் வரிசையாக அமர்ந்திருக்க, அவர்களுக்கு உறவினர்கள் உணவு பரிமாறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

வேகமாக வாகனங்கள் செல்லும் விரைவுச்சாலையை பிக்னிக் தலமாக மாற்றி, தங்களது சொந்த இடம் போல உணவருந்திய இந்தக் குடும்பத்தினரின் செயலுக்கு இணையவாசிகளிடை கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பொதுச் சொத்துக்கள் மற்றும் பொது விதிகளுக்கு மதிப்பளிக்காமல், அடிப்படை சமூகப் பொறுப்புணர்வு சிறிதும் இன்றி நடந்துகொண்டதாகப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

குடும்பமாகச் சேர்ந்து உணவருந்துவது தவறில்லை என்றாலும், விரைவுச்சாலை போன்ற ஆபத்தான மற்றும் பொதுமக்களுக்கான இடங்களில் இப்படிச் செய்வது வாகன ஓட்டிகளுக்கும் அந்த குடும்பத்திற்கும் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், பொது இடங்களில் குப்பைகளைப்போட்டு விட்டு, அதைச் சுத்தம் செய்வது தூய்மைப் பணியாளர்களின் வேலை மட்டுமே என்று நினைக்கும் மக்களின் அலட்சியப் போக்கையும் இந்த சம்பவம் மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளதாக விவாதங்கள் எழுந்துள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in