LATEST NEWS
எங்களையே ஏமாத்த பாக்குறீயா..? 1.7 லட்சம் பில் கட்டாததால் நேர்ந்த கொடூரம்.. தாய்லாந்தில் பெண்ணின் சம்மதமின்றி ‘கூந்தல் ஒப்பந்தம்’ போட்டு மொட்டை போட்ட கொடூரம்..!!
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பிங்க்லாவ் பகுதியில், பார் ஒன்றில் 1.7 லட்சம் ரூபாய் (60,000 பாட்) பில் தொகையைச் செலுத்தாததற்காக 18 வயது இளம் பெண் ஒருவரின் தலை மொட்டையடிக்கப்பட்ட கொடூரமான சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் போலி அடையாள அட்டையைப் பயன்படுத்திப் பாருக்குள் நுழைந்ததோடு, 200-க்கும் மேற்பட்ட மதுபானங்கள் மற்றும் உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு, பணத்தைச் செலுத்தாமல் தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
https://twitter.com/i/status/2094172359057891770
பணத்தை மீட்கப் போலீசாரை அழைப்பதற்குப் பதிலாக, பாரின் ஊழியர்கள் அந்தப் பெண்ணை மிரட்டி ‘கூந்தல் விற்பனை ஒப்பந்தம்’ (Hair purchase contract) என்ற ஒன்றில் கட்டாயக் கையெழுத்து வாங்கியுள்ளனர். பெண்ணின் தலைமுடியின் மதிப்பு 3,000 பாட் எனக் கணக்கிடப்பட்டு, அது பில் தொகையில் கழிக்கப்படும் என்று கூறி, பார்பெண்டர் ஒருவர் மின்சார ரேசரைக் கொண்டு அவரது தலைமுடியை முழுமையாக மொட்டையடித்துள்ளார். இந்த அதிர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தாம் வன்முறையைப் பயன்படுத்தவில்லை என்றும், பெண்ணின் சம்மதத்துடனேயே இது நடந்ததாகப் பார் நிர்வாகம் கூறினாலும், ஊழியர்கள் தங்களைத் தாக்கியதாகப் பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். சமூக ஆர்வலர் சலிதா பலாமத் இந்தச் சம்பவத்திற்குத் தன் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். சட்டத்தைக் கையில் எடுத்துப் பெண்ணை அவமானப்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து தாய்லாந்து சமூக மேம்பாடு மற்றும் மனித பாதுகாப்பு அமைச்சகம் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
