LATEST NEWS
“மிக்க நன்றி அங்கிள்…” நடுரோட்டில் கைகளைக் கூப்பி கண்கலங்கிய வாலிபர்.. அந்த நபர் சொன்ன ஒற்றை வார்த்தை.. உருகிப்போன இணையவாசிகள்.. நெஞ்சை உலுக்கும் நெகிழ்ச்சி வீடியோ..!!
இன்று நம்மிடையே மனிதநேயம் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில், மழையில் நனைந்தபடி தவித்த ஸ்விக்கி டெலிவரி பாய்க்கு அந்நிய நபர் ஒருவர் செய்த நெஞ்சம் உருகும் உதவி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பார்ப்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. கொட்டும் மழையில் முற்றிலும் நனைந்தபடி, வாடிக்கையாளரின் உணவைச் சரியான நேரத்திற்கு டெலிவரி செய்ய வேண்டும் என்ற பதற்றத்துடன் அந்த டெலிவரி பாய் பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளார். வண்டியில் பெட்ரோல் போட்டுவிட்டுத் தன்னிடம் இருந்த பணத்தை அவர் எடுத்தபோது, அந்தப் பண நோட்டு மழையினால் முற்றிலும் நனைந்து போயிருந்தது. இதனைப் பார்த்த அங்கிருந்த பெண் ஊழியர், ஈரமான நோட்டை வாங்க முடியாது என்று கறாராக மறுத்துவிட்டார். அந்த ஏழை இளைஞர் கைகளைக் கூப்பிக் கெஞ்சியும் அந்த ஊழியர் இரக்கம் காட்டாததால், வேறு வழியின்றி அவர் செய்வதறியாது கண்ணீருடன் அங்கே திகைத்து நின்றுள்ளார்.
https://twitter.com/_Attitude_Vini/status/2094710507978846514/video/1
அந்த இக்கட்டான சூழ்நிலையில், அங்குப் பெட்ரோல் போட பைக்கில் வந்த ஒரு நல்இதயம் படைத்த நபர், அந்த இளைஞரின் தவிப்பைக் கவனித்துள்ளார். துளியும் யோசிக்காமல் உடனடியாக அந்த டெலிவரி பாயின் ஈரமான பண நோட்டைத் தான் வாங்கிக் கொண்டு, தனது சொந்தப் பணத்திலிருந்து முழுத் தொகையையும் செலுத்தி அவரது பைக் டேங்க் நிரம்பப் பெட்ரோல் போட்டுத் தந்துள்ளார். இதனால் கண்கலங்கிப் போன அந்த இளைஞர், கைகளைக் கூப்பி தழுதழுத்த குரலில், “மிக்க நன்றி அங்கிள்…” என்று நன்றிக்கடனை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு அந்த நபர், “உன் வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு இதே போன்ற உதவியைச் செய், அதுவே போதும்” என்று நெஞ்சைத் தொடும் வண்ணம் நெகிழ்ச்சியாகப் பதிலளித்துள்ளார். மற்றவர்களுக்காக வாழ்வதும், எளிய மனிதர்களுக்குள் மகிழ்ச்சியைப் பகிர்வதுமே உண்மையான மனிதநேயம் என்பதை விளக்கும் இந்த நேரடிப் பதிவு தற்பொழுது இணையத்தில் அசுர வேகத்தில் வைரலாகி வருகிறது.
