BREAKING: கே.என்.நேரு வீட்டில் சோதனை.. குவியும் ஆதரவாளர்களால் திணறும் போலீஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: கே.என்.நேரு வீட்டில் சோதனை.. குவியும் ஆதரவாளர்களால் திணறும் போலீஸ்..!!

Published

on

திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறையில் சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு வேலைவாய்ப்பு முறேகடு நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் இன்று காலை முதலே இந்தச் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருச்சி தில்லைநகரில் உள்ள கே.என்.நேருவின் இல்லத்தில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ரெய்டு குறித்த தகவல் பரவியதை அடுத்து, அவரது ஆதரவாளர்களும் திமுக தொண்டர்களும் தில்லைநகர் வீட்டின் முன்பு பெருமளவில் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், அசாதாரணச் சூழலைக் கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in