“அடுத்தடுத்து அதிரடி..! K.N. நேரு உட்பட 13 பேர் மீது பாய்ந்தது FIR… லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கையால் விரைவில் கைது..? அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு..!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடுத்தடுத்து அதிரடி..! K.N. நேரு உட்பட 13 பேர் மீது பாய்ந்தது FIR… லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கையால் விரைவில் கைது..? அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு..!”

Published

on

நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்ற முறைகேடு புகார்கள் தொடர்பாக, தமிழ்நாடு அமைச்சர் K.N. நேரு விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, இவருக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனைகளை மேற்கொண்டது. இந்தச் சோதனை நடவடிக்கைகளுக்கு மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. அதில் அமைச்சர் K.N. நேரு, அவரது சகோதரர்களான K.N. மணிவண்ணன், N. ரவிச்சந்திரன் உட்பட மொத்தம் 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in