சிசிடிவியிலும் சிக்காத முகம்… புருவத்தில் இருந்த தழும்பால் மாட்டிய திருடன்… ஆடம்பர வாழ்க்கைக்காக திருடனாக மாறிய துணை நடிகரின் பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிசிடிவியிலும் சிக்காத முகம்… புருவத்தில் இருந்த தழும்பால் மாட்டிய திருடன்… ஆடம்பர வாழ்க்கைக்காக திருடனாக மாறிய துணை நடிகரின் பகீர் பின்னணி..!!

Published

on

ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள மது வியாபாரி ஒருவரின் வீட்டில் நடந்த பெரும் திருட்டு வழக்கை, சிசிடிவி காட்சியில் முகமே தெரியாத நிலையிலும் புருவத்தில் இருந்த ஒரே ஒரு தழும்பு அடையாளத்தை வைத்துக் காவல்துறையினர் துப்பறிந்து குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாகக் கௌரேஷ் என்ற வாலிபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

வியாபாரியின் வீட்டில் திருடிவிட்டுத் தப்பியோடிய மர்ம நபரைத் தேட, போலீசார் அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். போதிய வெளிச்சம் இல்லாததால் திருடனின் முகம் தெளிவாகத் தெரியாமல் போலீசாருக்குப் பெரும் சவாலாக இருந்தது. இருப்பினும், ஒவ்வொரு பிரேமாக சிசிடிவி காட்சிகளைப் பிரித்து மிகத் தீவிரமாக ஆய்வு செய்தபோது, சந்தேகப்படும் நபரின் வலது புருவத்தில் பழைய காயம் போன்ற ஒரு தழும்பு அடையாளம் இருப்பதை போலீசார் உன்னிப்பாகக் கவனித்தனர். இந்த ஒரு சிறிய அடையாளத்தை முக்கியத் துப்பாக வைத்துப் பழைய குற்றவாளிகளின் பட்டியலை ஒப்பிட்டுப் பார்த்து கௌரேஷை மடக்கிப் பிடித்தனர்.

Advertisement

கைது செய்யப்பட்ட கௌரேஷிடம் நடத்திய விசாரணையில், அவர் திரைப்படத் துறையில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக (துணை நடிகர்) வேலை பார்த்து வருவது தெரியவந்தது. சினிமா உலகத் தொடர்புகள் இருந்தபோதிலும், தனது ஆடம்பரமான வாழ்க்கை முறையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே அவர் இரவில் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்ற அதிர்ச்சி உண்மையும் வெளிவந்துள்ளது. அவரிடமிருந்து திருடப்பட்ட பொருட்களை மீட்கவும், இதற்கு முன்பு இது போன்ற வேறு ஏதேனும் திருட்டுச் சம்பவங்களில் அவருக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தற்போது தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in