தினமும் ஒரு முட்டை… 14 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..? டாக்டர் சொன்ன அந்த சீக்ரெட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தினமும் ஒரு முட்டை… 14 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..? டாக்டர் சொன்ன அந்த சீக்ரெட்..!!

Published

on

மலிவு விலையில் எளிதாகக் கிடைக்கும் சத்தான உணவுகளில் முட்டைக்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு. புரதத்தின் சிறந்த மூலமாக விளங்கும் முட்டை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. உடலுக்குத் தேவையான பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முட்டையில் நிறைந்துள்ளதால், இது ஒரு முழுமையான உணவாகவும் கருதப்படுகிறது. ஒரு முட்டையை உட்கொள்வதன் மூலம் சுமார் 75–76 கலோரிகள், 6–7 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு மற்றும் 1.6 கிராம் நிறைவுற்ற கொழுப்பு கிடைக்கிறது. முட்டையில் உள்ள இந்த ஊட்டச்சத்துக்கள் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பேணவும், புதிய செல்கள் மற்றும் திசுக்களின் உருவாக்கத்திற்கும் பங்களிக்கின்றன.

இத்தனை நன்மைகளைக் கொண்ட முட்டையை அவ்வப்போது சாப்பிடுவதைவிட, தினமும் ஒன்று என்ற அடிப்படையில் தொடர்ந்து 14 நாட்கள் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்ஃபோர்டில் பயிற்சி பெற்ற, 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இரைப்பைக் குடலியல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளபடி, தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் மூளைக்கு நல்லது; முட்டையில் உள்ள கோலைன், நினைவாற்றல் மற்றும் கவனத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், முட்டை நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அளவை மேம்படுத்த உதவுவதுடன், சமச்சீரான உணவின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளும்போது இதய ஆரோக்கியத்திற்கும் துணைப்புரியும் என டாக்டர் சௌரப் சேத்தி குறிப்பிடுகின்றார்.

Advertisement

https://www.instagram.com/reel/DWQFMzyj8Nf/?utm_source=ig_web_button_share_sheet

அத்துடன், மஞ்சள் கருவில் உள்ள லுடீன் மற்றும் ஸீக்ஸாந்தின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. முடி, சருமம் மற்றும் நகங்களுக்குத் தேவையான முட்டையில் உள்ள புரதம் மற்றும் சல்பர் சார்ந்த அமினோ அமிலங்கள் கெராட்டின் உற்பத்திக்கு உதவுகின்றன. முட்டையில் உயர்தர புரதம், கோலைன், இரும்பு, அயோடின், ஒமேகா-3, வைட்டமின்கள் A, D, E, B12 உள்ளிட்ட பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. காலை உணவில் முட்டையை சேர்த்துக்கொள்வது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தந்து பசியைக் கட்டுப்படுத்த உதவும். மேலும், முட்டை சாப்பிடாதவர்கள் டோஃபு, டெம்பே, எடமாமே போன்ற சோயா உணவுகளை தாவர அடிப்படையிலான புரதத்தின் நல்ல ஆதாரங்களாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in