LATEST NEWS
வயசானவங்க இப்படி பார்த்தா என்ன பண்றது…? பயந்துபோய் ஆடைக்கு மேல் சட்டை அணிந்த பெண்… நடுரோட்டில் ஆடையை மாற்றிய இளம்பெண்ணின் குமுறல்..!!
“வழியில் இருந்த பெரியவர்கள் எங்களை மோசமாக முறைத்துப் பார்த்ததால், வேறு வழியின்றி எனது ஆடைக்கு மேல் கூடுதல் சட்டை அணிய வேண்டியதாயிற்று” என்று டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் இளம்பெண் ஒருவர் எதிர்கொண்ட அசௌகரியமான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் நேகா கோபானி என்ற பயனர் தனது தோழி பாருலுடன் டெல்லியின் மையப் பகுதியான கன்னாட் பிளேஸில் பொதுவெளியில் நடந்து சென்றபோது இந்த வீடியோவை எடுத்துப் பகிர்ந்துள்ளார்.
வீடியோவில், பாருல் என்ற பெண் தான் உடுத்தியிருந்த ஆடைக்கு மேல் அவசரமாக மற்றொரு சட்டையைப் போட்டுக் கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதற்குக் காரணம் குறித்து நேகா அவரிடம் கேட்டபோது, “அங்கு கூடியிருந்த கூட்டம் மிகவும் மோசமாக இருந்தது; குறிப்பாகச் சில வயது முதிர்ந்த நபர்கள் தங்களை இடைவிடாமல் அநாகரிகமான முறையில் முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்ததால் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லாதது போன்ற பயமும் அசௌகரியமும் ஏற்பட்டது” என்று பாருல் கண்ணீருடன் விவரித்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், நாட்டின் தலைநகரிலேயே பெண்களுக்குப் பொதுவெளியில் உரிய சுதந்திரமும் பாதுகாப்பும் இல்லை என்பதை இது காட்டுவதாக நெட்டிசன்கள் பலரும் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். சில சமயங்களில் இளைஞர்களை விட வயது முதிர்ந்தவர்களின் இத்தகைய அநாகரிகப் பார்வைகளே பெண்களைப் பொது இடங்களில் அதிகம் முகம் சுளிக்க வைக்கிறது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் பெண்களின் ஆடைத் சுதந்திரத்தை முடக்குவதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருவதால் இந்த விவகாரம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
