காதலன் செத்தது கூட தெரியல..! “அந்த ஆள காதலிக்கக் கூடாது” பெத்த தாயே மகளை 25 வருசம் இருட்டறையில பூட்டி வச்ச கொடூரம்… ஒரே ஒரு மொட்டை கடுதாசி… உடைந்தது கால் நூற்றாண்டு கால மர்மம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காதலன் செத்தது கூட தெரியல..! “அந்த ஆள காதலிக்கக் கூடாது” பெத்த தாயே மகளை 25 வருசம் இருட்டறையில பூட்டி வச்ச கொடூரம்… ஒரே ஒரு மொட்டை கடுதாசி… உடைந்தது கால் நூற்றாண்டு கால மர்மம்…!!

Published

on

பிரான்சின் பொய்ட்டியர்ஸ் நகரில் வசித்து வந்த செல்வாக்குமிக்க மோனியர் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண் பிளான்ச் மோனியர். 1876-ல், வசீகரமான தோற்றம் கொண்ட பிளான்ச், ஒரு வயதான மற்றும் ஏழை வழக்கறிஞரைக் காதலித்தார். ஆனால், அவரது சமூக அந்தஸ்திற்கு இந்தத் தொடர்பு இழுக்கு என நினைத்த அவரது தாய் லூயிஸ் மோனியர் இக்காதலை கடுமையாக எதிர்த்தார். தாயின் பேச்சைக் கேட்க பிளான்ச் மறுத்ததால், ஆத்திரமடைந்த தாய் அவரை வீட்டின் மாடி அறையில் பூட்டி வைத்தார். வெளியே கேட்பவர்களிடம் தன் மகள் “வெளிநாட்டிற்குச் சென்று குடியேறிவிட்டாள்” எனப் பொய்யைக் கூறி சமூகத்தை நம்ப வைத்தார்.

கால் நூற்றாண்டு காலமாக (25 ஆண்டுகள்) அந்த இருட்டறைக்குள்ளேயே பிளான்ச் சிறை வைக்கப்பட்டிருந்தார். 1901 ஆம் ஆண்டு பாரிஸ் தலைமை வழக்கறிஞருக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் ரகசியக் கடிதம் இந்த மர்மத்தை உடைத்தது. உடனடியாக அந்த வீட்டிற்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள், மாடி அறையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கே ஜன்னல்கள் முழுமையாக மூடப்பட்டு, கும்மிருட்டில், தனது சொந்தக் கழிவுகள் மற்றும் அழுகிய உணவுத் துண்டுகளுக்கு நடுவே, எலும்பும் தோலுமாக பூச்சிகள் சூழக் கிடந்த பிளான்ச் மோனியரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சூரிய ஒளியைக் கண்டது அப்போதுதான்.

Advertisement

பிளான்ச் மீட்கப்பட்ட 15 நாட்களிலேயே, பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் இதய நோய் காரணமாக அவரது தாய் லூயிஸ் மரணமடைந்தார். இந்தச் சதிக்கு உடந்தையாக இருந்த பிளான்ச்சின் சகோதரர் மார்செலுக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பிளான்ச்சின் காதலன் அவர் சிறையிலிருந்தபோதே (1885-ல்) உயிரிழந்திருந்தார். நீண்ட கால இருட்டறைச் சிறைவாசத்தால் கடுமையான உளவியல் பாதிப்புக்குள்ளான பிளான்ச், மீட்கப்பட்ட பிறகும் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் தனது எஞ்சிய நாட்களை ஒரு மனநலக் காப்பகத்திலேயே கழித்து, 1913-ல் தனது 64-வது வயதில் காலமானார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in