“இது என்னடா சோதனை..!” திருட வந்த இடத்தில் திருடனுக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… நெட்டிசன்களை சிரிக்க வைத்த வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“இது என்னடா சோதனை..!” திருட வந்த இடத்தில் திருடனுக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… நெட்டிசன்களை சிரிக்க வைத்த வைரல் வீடியோ..!!

Published

on

குஜராத் மாநிலம் சூரத் நகரின் நானா வரச்சா பகுதியில், பூட்டப்பட்டிருந்த வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவரின் வீட்டிற்குள் கொள்ளையடிக்க முயன்ற திருடன் ஒருவன், பாதுகாப்பு கிரில் கேட்டின் இடுக்கில் மாட்டிக்கொண்ட விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. திருடுவதற்காக வீட்டிற்குள் நுழைய முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அவனது உடல் கிரில் கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டது. அவனால் வெளியே வரவும் முடியாமல், உள்ளே செல்லவும் முடியாமல் தவித்ததை அடுத்து, அந்த வழியே சென்ற பொதுமக்கள் அங்கு திரண்டனர். கிரில் கம்பிகளுக்கு நடுவே திருடன் பரிதாபமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த நெஞ்சை பதறவைக்கும் மற்றும் விசித்திரமான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் குறித்து கபோத்ரா போலீசார் தெரிவிக்கையில், இந்த விசித்திர விபத்து நடந்து சுமார் 10 நாட்கள் ஆகிறது என்றும், சம்பவம் நடந்த சமயத்தில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தவொரு புகாரும் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளனர். இருப்பினும், சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானதை அடுத்து, கிரில் கேட்டில் சிக்கிய அந்த நபர் யார், அவனது பின்னணி என்ன மற்றும் எந்த நோக்கத்திற்காக அவன் அங்கு வந்தான் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருடச் சென்ற இடத்தில் திருடனே கம்பிகளுக்கு நடுவே சிக்கிய இந்தச் சம்பவம் சூரத் பகுதியில் பெரும் சிரிப்பலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in