LATEST NEWS
“எனக்கு நிஜமாவே தெரியாது சார்…” 30,000 டிராஃபிக் ஃபைன்… கடைசி நிமிஷத்தில் பைக் ரைடர் பண்ணிய அந்த ஒரு வேலை… அசந்துபோன போலீஸ்.. வைரல் வீடியோ..!!
டெல்லியில் சுரங்கப் பாதை ஒன்றில் இருந்து வெளியேறிய இருசக்கர வாகன ஓட்டியை போக்குவரத்து காவலர் ஒருவர் உடனடியாக நிறுத்தி, அந்தப் பாதையில் இருசக்கர வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அபராதம் விதிக்க முற்பட்டார். ஆனால், அந்த பைக் ரைடரின் தலைக்கவசத்தில் இருந்த கேமராவும், அவர் போக்குவரத்து காவலரிடம் நிதானமாகவும் அமைதியாகவும் பேசிய விதமும் அவரை ரூ.30,000 அபராதத்திலிருந்து காப்பாற்றியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜ் படேல் என்ற அந்த பைக் ரைடர், தான் அந்தச் சுரங்கப் பாதைக்குள் நுழைவதற்கு முன்பே, இதில் இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதி உள்ளதா இல்லையா என்பது பற்றித் தனக்குத் தெரியவில்லை என்று ஹெல்மெட் கேமராவில் பேசியிருந்தார். காவலர் அவரை மறித்தபோது, தான் வேண்டுமென்றே இந்த விதியை மீறவில்லை என்பதையும், தனக்கு இதுபற்றி உண்மையிலேயே தெரியாது என்பதையும் நிரூபிக்க, சுரங்கப் பாதைக்குள் நுழைவதற்கு முன் தான் பதிவு செய்த ஆடியோ/வீடியோ ஆதாரத்தைக் காண்பிப்பதாகக் கூறினார். அவரின் இந்த நேர்மையான விளக்கத்தையும் ஆதாரத்தையும் கேட்ட போக்குவரத்து காவலர், அது அறியாமல் செய்த தவறு என்பதைப் புரிந்து கொண்டு அபராதம் எதும் விதிக்காமல் அவரைச் செல்ல அனுமதித்தார்.
https://www.instagram.com/reel/DdTng_4z9zB/?utm_source=ig_web_button_share_sheet
தன்னுடைய இந்தச் சமயோசிதமான பேச்சாலும் வீடியோ ஆதாரத்தாலும் ரூ.30,000 அபராதம் விதிக்கப்படாமல் தப்பித்ததாகக் குறிப்பிட்ட ராஜ் படேல், அந்தப் போக்குவரத்து காவலருக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். மேலும், தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்து “போக்குவரத்து காவல்துறையினரை மதியுங்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து வரும் நிலையில், இணையவாசிகளும் ‘காவலரின் மனநிலை மாறுவதற்குள் அங்கிருந்து கிளம்பியது நல்லதாயிற்று’ என்றும் ‘அடுத்த முறை எந்தச் சுரங்கப் பாதைக்குள் நுழைவதற்கு முன்பும் வழிகாட்டிப் பலகையைச் சரியாகப் பாருங்கள்’ என்றும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
