அடக்கடவுளே..! முகத்தில் கேக் பூசியதால்… பிறந்தநாள் பார்ட்டியில் நண்பனைக் கத்தியால் குத்திக் கொன்ற கொடூரம்…!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கடவுளே..! முகத்தில் கேக் பூசியதால்… பிறந்தநாள் பார்ட்டியில் நண்பனைக் கத்தியால் குத்திக் கொன்ற கொடூரம்…!!

Published

on

ஜம்மு காஷ்மீரின் ஜானுபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப்நகரில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது முகத்தில் கேக் பூசியதால் ஏற்பட்ட தகராறில், நண்பனை இளைஞர் ஒருவரே கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரச் சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது.

சாலையோரத்தில் நீரஜ் என்பவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக அவருடைய சகோதரர் ரிஷு மற்றும் பவன் நாயர் உள்ளிட்ட பல நண்பர்கள் ஒன்று கூடினர். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நீரஜ் கேக்கை வெட்டியபோது, அவரது நண்பரான பவன் நாயர் எதிர்பாராதவிதமாக நீரஜின் முகத்தில் கேக்கை பூசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நீரஜுக்கும் பவனுக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

அங்கு நின்றிருந்த மற்ற நண்பர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும், ஏற்பட்ட மோதலில் பவன் நாயர் பலத்த காயமடைந்தார். படுகாயமடைந்த அவர், உடனடியாக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக நீரஜ் மற்றும் அவரது சகோதரர் ரிஷுவை ஜெயின்பூர் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in