உஷார் மக்களே..! மழைநீர் தேங்கினால் ரூ.10,000 அபராதம்.. அமைச்சர் எச்சரிக்கை..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உஷார் மக்களே..! மழைநீர் தேங்கினால் ரூ.10,000 அபராதம்.. அமைச்சர் எச்சரிக்கை..!

Published

on

தமிழ்நாட்டில் பருவகால மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொது இடங்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வீடுகள், பொது இடங்கள் மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளில் கொசு உற்பத்தித் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேங்கும் மழைநீரை முறையாக அகற்றாமல் அலட்சியமாகச் செயல்படும் நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள் மற்றும் வளாகங்களில் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் மழைநீரைத் தேங்க விடும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் எச்சரித்துள்ளார். டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in