குட் நியூஸ் மக்களே..! இனி டெங்கு காய்ச்சலுக்கு பயப்பட தேவையில்லை… இந்தியாவில் களமிறங்கும் முதல் தடுப்பூசி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குட் நியூஸ் மக்களே..! இனி டெங்கு காய்ச்சலுக்கு பயப்பட தேவையில்லை… இந்தியாவில் களமிறங்கும் முதல் தடுப்பூசி..!!

Published

on

ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் மற்றும் டகேடா பார்மசூட்டிகல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, ‘க்யூடெங்கா’ என்ற பெயரில் நாட்டின் முதல் டெங்கு தடுப்பூசியைத் தயாரித்துள்ளன. இந்தத் தடுப்பூசியை 2027-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப்போவதாக இரு தரப்பினரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து டகேடா பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத் தலைவர் மகேந்தர் நாயக் கூறுகையில், கடந்த ஜூலை மாதத்தில் இத்தடுப்பூசியைச் சந்தைப்படுத்துவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றும், வணிக ரீதியான விநியோகம் தொடங்குவதற்கு முன்பாக மற்ற நடைமுறைகளை நிறைவு செய்வதே தங்களது தற்போதைய முன்னுரிமை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய சூழலில் தடுப்பூசியின் விலை நிர்ணயம் குறித்துக் கணிப்பது அவசரமான ஒன்று என்றும், இந்தியாவில் நோய் தடுப்புத் திட்டத்தில் இதனைச் சேர்ப்பதே தங்களது நீண்டகால இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

4 முதல் 60 வயது வரையுள்ள நபர்களுக்காக மத்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் இருந்து 2026-ஆம் ஆண்டு ஜூலையில் ‘க்யூடெங்கா’ தடுப்பூசியைச் சந்தைப்படுத்துவதற்கான அங்கீகாரத்தை இந்தியா வழங்கியது. இந்த டெங்கு தடுப்பூசியானது 3 மாதங்கள் இடைவெளியில் இரு தவணைகளாகச் செலுத்தப்பட உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in