“அடுத்தவர் பொருள் நமக்கு வேண்டாம்…” குப்பையில் கிடந்த 7 பவுன் தங்கம்… உரிமையாளரை தேடி நகையை கொடுத்த தூய்மை பணியாளர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடுத்தவர் பொருள் நமக்கு வேண்டாம்…” குப்பையில் கிடந்த 7 பவுன் தங்கம்… உரிமையாளரை தேடி நகையை கொடுத்த தூய்மை பணியாளர்..!!

Published

on

சென்னை மயிலாப்பூர் 125-வது வார்டில் உர்பசர் நிறுவனத்தின் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் மோகன் காந்தி, குப்பையில் கிடைத்த 7 பவுன் தங்கச் சங்கிலியை நேர்மையுடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது. மயிலாப்பூர் சித்ரா குளம் அருகே உள்ள சாலை தெருவைச் சேர்ந்த ரமா என்பவர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது வீட்டில் விநாயகர் சிலையை வைத்து, அதற்கு 7 பவுன் தங்கச் சங்கிலி அணிவித்து வழிபாடு செய்துள்ளார். பூஜைகள் முடிந்த பின்னர், கவனக்குறைவால் அந்த தங்கச் சங்கிலி குப்பையுடன் சேர்ந்து சென்றுள்ளது.

அப்பகுதியில் வீடுகள் தோறும் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்த தூய்மை பணியாளர் மோகன் காந்தியின் கவனத்திற்கு தங்கச் சங்கிலி கிடைத்தது. உடனடியாக அதனை மேனேஜர் ஆண்டனி மணிமாறன், யூனிட் ஆபிசர் கமலக்கண்ணன் மற்றும் சூப்பர்வைசர் அருள் வல்லரசு ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். தங்கச் சங்கிலியின் உரிமையாளரை கண்டறிந்து ஒப்படைக்குமாறு அவர்கள் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, மோகன் காந்தி மீண்டும் அப்பகுதிக்குச் சென்று பொதுமக்களிடம் விசாரித்துள்ளார்.

Advertisement

அப்போது ரமா, தங்கச் சங்கிலிக்கான உரிய ஆவணங்களையும், விநாயகர் சிலைக்கு அந்த நகை அணிவிக்கப்பட்டிருந்த புகைப்படத்தையும் காண்பித்து, அது தன்னுடைய நகை என்பதை உறுதி செய்துள்ளார். இதையடுத்து நிறுவனத்தின் மேலாளர் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து மோகன் காந்தி, 7 பவுன் தங்கச் சங்கிலியை ரமாவிடம் பத்திரமாக ஒப்படைத்தார். குப்பையில் கிடைத்த தங்க நகையை நேர்மையுடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் மோகன் காந்தியின் நேர்மைக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்நிகழ்வில் மோகன் காந்தியின் மனைவி ஜெயா, அவரது மகள்கள் தேன்மொழி, நிலா ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in