“அடக்கடவுளே.. மலையிலிருந்து உருண்ட ராட்சதப் பாறை…” ரயிலின் சக்கரத்தில் மோதிய கொடூரம்.. லோகோ பைலட் செய்த அந்த சாதுரிய காரியம்.. நடுக்கமூட்டும் சம்பவம்..!1 – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடக்கடவுளே.. மலையிலிருந்து உருண்ட ராட்சதப் பாறை…” ரயிலின் சக்கரத்தில் மோதிய கொடூரம்.. லோகோ பைலட் செய்த அந்த சாதுரிய காரியம்.. நடுக்கமூட்டும் சம்பவம்..!1

Published

on

நாகர்கோவிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது, மலையிலிருந்து உருண்டு விழுந்த ராட்சதப் பாறை ஒன்று மோதியதில் ரயிலின் சக்கரம் சேதமடைந்தது. எனினும் லோகோ பைலட்டின் சாதுரியத்தால் நூலிழையில் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் முத்தம்பட்டி மற்றும் சிவாடி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மலைப்பாங்கான பாதையில் நேற்று அதிகாலையில் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அருகில் இருந்த மலையிலிருந்து ஒரு பெரிய பாறை திடீரென உருண்டு வந்து, ஓடிக்கொண்டிருந்த ரயிலின் சக்கரங்கள் மீது மிக பலமாக மோதியுள்ளது.

பாறை மோதிய வேகத்தில் ரயிலின் ‘ஷாக் அப்சார்பர்’ பகுதி மிகக் கடுமையான சேதமடைந்தது. இதை உடனடியாகக் கவனித்த ரயிலின் லோகோ பைலட், சற்றும் தாமதிக்காமல் ரயிலை அவசரமாக நிறுத்தினார்; இதனால் ரயிலில் பயணித்த நூற்றுக்கணக்கான பயணிகள் நல்வாய்ப்பாகப் பெரும் விபத்திலிருந்து தப்பினர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் சேதமடைந்த பகுதிகளைச் சீரமைத்த பிறகு, ரயில் மீண்டும் பெங்களூரு நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்தது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in