“அடேய் யாரு டா நீ..?” கையில் கடப்பாரையோடு நள்ளிரவில் காரை சல்லி சல்லியா நொறுக்கிய ஹெல்மெட் ஆசாமி.. சிசிடிவி-யில் சிக்கிய பகீர் காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடேய் யாரு டா நீ..?” கையில் கடப்பாரையோடு நள்ளிரவில் காரை சல்லி சல்லியா நொறுக்கிய ஹெல்மெட் ஆசாமி.. சிசிடிவி-யில் சிக்கிய பகீர் காட்சி..!!

Published

on

பெங்களூரு அடுத்த நெலமங்களா டவுன் காவல் எல்லைக்குட்பட்ட அக்ஷரா கவுண்டி லேஅவுட் பகுதியில், நள்ளிரவில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரை மர்ம நபர் ஒருவர் கடப்பாரையால் அடித்து நொறுக்கிய துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத அந்த நபர் தனது முகத்தை மறைக்கும் வகையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு, கையில் ஒரு பெரிய கடப்பாரையுடன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த பாரத் என்பவருக்குச் சொந்தமான கியா காரின் கண்ணாடிகளைச் சல்லிச் சல்லியாக உடைத்ததோடு, காரின் பல பாகங்களையும் கடப்பாரையால் கொடூரமாக அடித்துச் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இந்தத் துணிகரத் தாக்குதல் ஒட்டுமொத்தமாக அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் நெலமங்களா டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரின் உரிமையாளரான பாரத்திற்கு யாரிடமாவது முன்விரோதம் உள்ளதா, பழிவாங்கும் நோக்கில் இந்தச் சம்பவம் நடந்ததா அல்லது நள்ளிரவில் போதை கும்பல் யாராவது இந்த அராஜகத்தில் ஈடுபட்டனரா என்ற பல கோணங்களில் போலீஸார் தப்பியோடிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in