CRIME
“ஐயோ பாவம்.. வீட்டின் முன்னே நின்றிருந்த மூதாட்டி..” திடீரென பாய்ந்து தாக்கிய குரங்கு.. 91 வயது பாட்டிக்கு நேர்ந்த விபரீதம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!1
கர்நாடக மாநிலம் கொப்பள் நகரின் பி.டி. பாட்டீல் நகரில், குரங்கு ஒன்று தாக்கி கீழே தள்ளியதில் 91 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. நஜமுனிசா பேகம் என அடையாளம் காணப்பட்ட அந்த மூதாட்டி, தனது வீட்டின் முன்பகுதியில் நின்று கொண்டிருந்த போது அங்கிருந்த குரங்கு ஒன்று திடீரென அவர் மீது பாய்ந்து தாக்கியுள்ளது.
குரங்கின் எதிர்பாராத இந்த அசுரத் தாக்குதலால் நிலைதடுமாறி மூதாட்டி பலமாகத் தரையில் விழுந்துள்ளார். இதில் அவருக்குத் தீவிரக் காயங்கள் ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், வயது முதிர்வு மற்றும் பலத்த காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். குடியிருப்புப் பகுதிகளில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருவதை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பயத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
