“டேய்… என்னை யார்னு நினைச்சே?…” மனிதனை ஒரே உதையில் காற்றில் பறக்கவிட்ட ரோபோ!.. அடிவாங்கி அலறிய இன்ஃபுளுயன்ஸர்… இணையத்தில் வீடியோ வைரல்…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“டேய்… என்னை யார்னு நினைச்சே?…” மனிதனை ஒரே உதையில் காற்றில் பறக்கவிட்ட ரோபோ!.. அடிவாங்கி அலறிய இன்ஃபுளுயன்ஸர்… இணையத்தில் வீடியோ வைரல்…!

Published

on

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க சண்டை போட்டியில், பிரபல சமூக வலைதளக் கணக்காளரான பிராங்கி லேபென்னா பங்கேற்றார். ‘ரோபோ என்டர்டெயின்மென்ட் காம்பாட்’ அமைப்பால் சான் பிரான்சிஸ்கோவில் நடத்தப்பட்ட இந்த கூண்டுச் சண்டையில், 6 அடி உயரமுள்ள மனித வடிவிலான ரோபோவை அவர் எதிர்கொண்டார்.

போட்டியின் தொடக்கத்தில் பிராங்கி லேபென்னா சில குத்துகளை ரோபோ மீது பலமாக இறக்கி தாக்குதலைத் தொடங்கினார். இருப்பினும், உடனடியாக மீண்டு வந்த அந்த ரோபோ, மிக வேகமாகத் தனது கால்களால் சக்திவாய்ந்த உதை ஒன்றை உதைத்தது. அந்த ஒரே உதையின் பலத்தில் பிராங்கி லேபென்னா நிலைதடுமாறி, கூண்டின் தரைப்பகுதியில் தூக்கி வீசப்பட்டார்.

Advertisement

இந்தச் சண்டையின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது. ரோபோக்கள் தன்னிச்சையாகச் செயல்படாமல் விஆர் தொழில்நுட்பம் மூலம் மனிதரால் இயக்கப்பட்டது என்றாலும், அதன் அசாதாரண வலிமையும் நகர்வுகளும் எதிர்காலத்தில் மனிதர்களுக்கும் ரோபோக்களுக்குமான சண்டைப் போட்டிகள் பொழுதுபோக்காக மாறுவதற்கான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in