CINEMA
“நான் வாயைத் திறந்தா ராதா ஜெயிலுக்குப் போகணும்…!” அம்பிகா விடுத்த அதிரடி மிரட்டல்..!!
தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகளான ராதா மற்றும் அம்பிகா இடையே ரூ.46 கோடி பண மோசடி தொடர்பாக வெடித்துள்ள குடும்பப் பிரச்சினை, தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்படும் அளவிற்குச் சென்று திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் தன்னிடம் கேட்காமலேயே பழைய காசோலைகளைப் பயன்படுத்திச் சுமார் ரூ.46 கோடி பணத்தைப் பெற முயன்றதாகத் தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மீது நடிகை ராதா அண்மையில் காவல்துறையில் புகார் அளித்துப் பேட்டி கொடுத்திருந்தார். பல ஆண்டுகளாகத் திரையுலகில் இணை பிரியாத சகோதரிகளாகப் பயணித்த இவர்களுக்குள் ஏற்பட்டுள்ள இந்த சொத்துப் பூசல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கடுமையான குற்றச்சாட்டுக்கு ஊடகங்கள் வாயிலாகப் பதிலடி கொடுத்துள்ள நடிகை அம்பிகா, “உண்மையில் பணம் போனது எனக்குத்தான். சொத்துக்களைப் பிரித்த வகையில் ராதாதான் எனக்கு 5 காசோலைகளை வழங்கினார், ஆனால் அவரே அதை வங்கியில் நிறுத்தவும் செய்துள்ளார்” என்று தன் தரப்பு நியாயத்தைக் கூறியுள்ளார். மேலும், போரூர் ஏஆர்எஸ் கார்டன் சொத்திலிருந்து தனது பெயரை அவர்கள் நீக்கிவிட்டதாகவும், ராதாவிடம் இருந்து தனக்கு இன்னும் ரூ.97 கோடி வர வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரூ.5,000 கோடி சொத்து மதிப்புடைய ராதாவின் உண்மைகளைத் தான் முழுமையாக வெளிப்படையாகக் கூறினால் அவர் சிறைக்குச் செல்ல வேண்டி வரும் என்று அம்பிகா விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை இணையத்தில் புதிய விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது
