CRIME
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு.. நடிகர் சிவகுமார் சுயசரிதையில் இருக்கும் அந்த ரகசியம்.. பின்னணியில் இருக்கும் அதிரடி திருப்பங்கள்..!!
பிரபல கிரானைட் தொழிலதிபர் ‘ஜெம்’ வீரமணி மீது 50 வயது பெண் அளித்த புகாரின் பேரில் கடந்த 2025 அக்டோபரில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அறக்கட்டளை மற்றும் ஆசிரமங்கள் மூலம் ஏழை மற்றும் ஆதரவற்ற சிறுமிகளுக்கு கல்வி உதவி வழங்குவதாகக் கூறி, அவர்களைப் போயஸ் கார்டனில் உள்ள சொகுசு பங்களாவிற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கை காவல்துறையினர் முதலில் முடிக்க முயன்றபோதும், சிறப்பு போக்சோ நீதிமன்ற உத்தரவின்படி நடத்தப்பட்ட மேல் விசாரணையில் கிடைத்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் வீரமணி, அவரது உதவியாளர் சாந்தி மற்றும் மகேந்திரசிம்மன் ஆகியோர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், நடிகர் சிவகுமார் எழுதிய சுயசரிதை நூலில் ‘ஜெம்’ வீரமணியின் பெயர் இடம்பெற்றிருப்பது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. சிவகுமாரின் தாயார் மறைந்தபோது, அவரது நண்பரான வீரமணி கண்ணம்மாபேட்டையில் கருப்பு கிரானைட் கல்லால் இலவசமாகச் சமாதி கட்டித் தந்ததாக அந்த நூலில் குறிப்பிட்டுள்ளதை எழுத்தாளர் ஷாலின் மரிய லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் ஆதாரத்துடன் பகிர்ந்துள்ளார். தொழிலதிபர்கள் மற்றும் இலக்கிய உலகினருடன் மட்டுமன்றி, சினிமா துறையின் பெரிய தலைகளுடனும் வீரமணிக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததை இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன், இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
