CRIME
“யாரும் என் இதயத்தை முழுமையாக்கவில்லை..!” தற்கொலைக்கு முன் ‘மிஸ் பிரட்டி இந்தியா’ நிதி திவாரி போட்ட பகீர் முகநூல் பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சிங்கராலி மாவட்டத்தில், பிரபல சமூக ஊடக பிரபலமும் மிஸ் பிரட்டி இந்தியா பட்டத்தை வென்றவருமான நிதி திவாரி (30), தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை மொர்வா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அவரது வீட்டின் அறையில் நிதி திவாரியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தற்கொலைக்கு முன்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், “யாரும் இந்த அரைகுறை இதயத்தை முழுமையாக்கவில்லை, நானே முழுமையாக்கிக் கொண்டேன். எனவே மற்றவர்களை விட உங்களையே நீங்கள் நேசியுங்கள்” என உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது தாயார் லதா திவாரி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், சனிக்கிழமை இரவு டெல்லியைச் சேர்ந்த சோனு சிங் என்ற இளைஞருடன் நிதி திவாரி தொலைபேசியில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதன் பின்னரே இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ஃபாலோயர்களைக் கொண்டுள்ள நிதி திவாரியின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மொர்வா போலீசார், அவரது மொபைல் போன் அழைப்பு விபரங்கள் மற்றும் சமூக ஊடகச் செயல்பாடுகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
