“என் அப்பாக்கு முழு விபரம் தெரியாது..!” சமூக வலைத்தளங்களில் வெடித்த SK வார்.. கங்கை அமரன் பற்ற வைத்த நெருப்பு.. பதறிப்போய் வெங்கட் பிரபு வெளியிட்ட அதிரடி அறிக்கை..!! – cinefeeds
Connect with us

CINEMA

“என் அப்பாக்கு முழு விபரம் தெரியாது..!” சமூக வலைத்தளங்களில் வெடித்த SK வார்.. கங்கை அமரன் பற்ற வைத்த நெருப்பு.. பதறிப்போய் வெங்கட் பிரபு வெளியிட்ட அதிரடி அறிக்கை..!!

Published

on

திரைப்பட இயக்குனரும் பாடலாசிரியருமான கங்கை அமரன், தனியார் யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றில் தனது மகன் வெங்கட் பிரபுவின் படம் தாமதமானது குறித்துப் பேசிய கருத்துக்கள், நடிகர் சிவகார்த்திகேயனை விமர்சிப்பதாக மாறி சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “இயக்குனருக்குக் கதை தயாராகி அமெரிக்கா வரை சென்று வேலைகளை முடித்த பின், அந்த நடிகர் படத்தின் கால்ஷீட்டை தள்ளிப்போட்டார்” எனக் குறிப்பிட்ட கங்கை அமரன், எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவர் பின்னால் போவது குடும்பத்திற்கு அவமானம் என்று காரசாரமாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த நேர்காணல் வைரலானதைத் தொடர்ந்து, இணையத்தில் நெட்டிசன்களும் ஹேட்டர்ஸ்களும் சிவகார்த்திகேயனை மிகக் கடுமையாக விமர்சித்து விவாதங்களை எழுப்பத் தொடங்கினர்.

இந்த விவகாரம் திரைத்துறையில் பெரும் பேசுபொருளாக மாறிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் சற்றுமுன் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு தந்தையாகத் தனது மகனின் படம் தாமதமாகும் போது ஏமாற்றம் அடைவது இயல்பானதுதான், அவருக்கு முழு விவரமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என்று கங்கை அமரனுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். மேலும், சிவகார்த்திகேயன் எப்போதும் தனக்கு ஒரு அருமையான நண்பர் மற்றும் சகோதரர் என்றும், பல்வேறு காரணங்களால் மட்டுமே அந்தத் திட்டம் தொடங்க முடியாமல் போனதே தவிர தங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ஒரு நல்ல கதை அமைந்தால் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும், இந்த வீண் யூகங்களுக்கு அனைவரும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வெங்கட் பிரபு தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in