“ஐயோ கடவுளே.. ஜாலியா போன இடத்துல நடந்த கொடூரம்..!” ரோலர் கோஸ்டர் சவாரியால் 100 பேருக்கு நேர்ந்த அவலம்..நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ கடவுளே.. ஜாலியா போன இடத்துல நடந்த கொடூரம்..!” ரோலர் கோஸ்டர் சவாரியால் 100 பேருக்கு நேர்ந்த அவலம்..நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ‘சிக்ஸ் பிளாக்ஸ் மேஜிக் மவுண்டன்’ பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள புகழ்பெற்ற ‘X2’ ரோலர் கோஸ்டர் சவாரியில் பங்கேற்ற பலருக்குக் கடுமையான மூளைக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பூங்கா நிர்வாகத்திற்கு எதிராகப் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு 76 மைல் வேகத்தில், 360 டிகிரி சுழலும் இருக்கைகளுடன் 215 அடி உயரத்திலிருந்து அதிரடியாக இறங்கும் இந்த சவாரியால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் மூளை பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் எனத் தற்பொழுது சட்டப்பூர்வக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சமீபத்தில் தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட வந்த பமீலா கில்லன் என்ற பெண்ணிற்குச் சவாரி முடித்ததும் மூளையில் கடுமையான ரத்தக்கசிவு ஏற்பட்டு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதேபோல நவோமி கிரீர் என்ற இளம் பெண் சுயமாகச் சுவாசிக்கக் கூட முடியாமல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சவாரியின் போது ஏற்படும் மிக வேகமான இயக்கம் காரணமாக, உடல் பாதுகாப்புப் பட்டைகளால் கட்டப்பட்டிருந்தாலும் தலை மற்றும் கழுத்துப் பகுதி திடீரென அசைவதால் மூளையின் உள்ள திசுக்களில் கடுமையான நரம்பியல் அழுத்தங்கள் ஏற்படுவதாக மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இதன் காரணமாக மூளையதிர்ச்சி, நரம்பு மண்டலப் பாதிப்பு மற்றும் கடுமையான வாந்தி, வலிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்பதால், ஏற்கனவே இதய அல்லது நரம்பியல் பிரச்சனை உள்ளவர்கள் இத்தகைய அதிரடி சவாரிகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ‘X2’ ரோலர் கோஸ்டர் சவாரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in