LATEST NEWS
சிக்கிய திமுக..! பரப்புரை முடிந்ததும் பெண்களுக்கு ரூ.200 டோக்கன் விநியோகம்.? திமுக மீது தவெக பகிரங்கப் புகார்..!!
இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில், ஆளுங்கட்சியான திமுகவினர் சார்பில் பெண்களுக்குப் பணத்திற்குப் பதிலாக டோக்கன் விநியோகம் செய்யப்படுவதாகப் பரபரப்புப் புகார் எழுந்துள்ளது திமுகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களுக்கு அழைத்து வரப்படும் பெண் வாக்காளர்களுக்கு, தலா ரூ.200 மதிப்பிலான டோக்கன்கள் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது .
கூட்டத்திற்கு வரும் பெண்களை முறைப்படுத்துவதற்காகவும், அடையாளத்திற்காகவும் 2 வெவ்வேறு நிறங்களில் இந்த டோக்கன்கள் விநியோகிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன . பரப்புரை நிகழ்ச்சிகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்த பிறகு, இந்த டோக்கன்களைப் பெற்றுக் கொண்டு பெண்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தரப்பில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் குற்றம்சாட்டப்பட்டுள்ளது .
இத்தொகுதியில் அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் நாளை தாராபுரத்தில் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
