CRIME
“இதயமே உறைந்துவிடும்.. பின்னால் வந்த 20 டன் எமன்..” ஸ்கூட்டரில் சென்ற 39 வயது நபருக்கு காத்திருந்த கொடூரம்.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!
ராஜ்கோட்டின் மாவ்டி 80-அடி சாலையில் செவ்வாய்க்கிழமை நண்பகலில் நிகழ்ந்த கொடூர விபத்தில், வாவ்டி பகுதியைச் சேர்ந்த 39 வயது ஆமத் சுமர்பாய் ஷேக் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். துளையிடும் இயந்திர பழுதுபார்ப்புத் தொழில் செய்து வந்த இவர், தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த 20 டன் எடை கொண்ட கிரேன் திடீரென ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் சாலையில் விழுந்த அவரது தலை மீது கிரேனின் சக்கரம் ஏறியதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக 108 ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர் உறுதி செய்தனர்.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உயிரிழந்த ஆமத் பாய் நான்கு மகள்களின் தந்தை என்பதால், அவரது திடீர் மரணம் அந்த குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய கிரேன் ஓட்டுநர் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடிய நிலையில், தாலுகா போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தப்பியோடிய கிரேன் ஓட்டுநரைத் தேடி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
