“ஒன்னு உனக்கு… இன்னொன்னு யாருக்கு..?” வேலைக்கு போறேன்னு மனைவியிடம் கதை விட்ட கணவன்… . கடைசியில் ‘சோலே பட்டூரே’பார்சலால் அம்பலமான உண்மை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஒன்னு உனக்கு… இன்னொன்னு யாருக்கு..?” வேலைக்கு போறேன்னு மனைவியிடம் கதை விட்ட கணவன்… . கடைசியில் ‘சோலே பட்டூரே’பார்சலால் அம்பலமான உண்மை..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூரில் உள்ள பிரிஜ்காட் பகுதியில், கள்ளக்காதலியைச் சந்திக்கச் சென்ற திருமணமான நபர் ஒருவரை அவரது மனைவி குடும்பத்தினருடன் சென்று கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜய் என்பவருக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். அவர் வேலைக்குச் செல்வதாகப் பொய் கூறிவிட்டு அடிக்கடி வேறு பெண்களைச் சந்திக்கச் செல்வதாக மனைவி கவிதா குற்றம் சாட்டி வந்த நிலையில், அஜய் பிரிஜ்காட்டில் ஒரு பெண்ணுடன் இருப்பதாகக் கவிதாவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

தகவலறிந்த மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் பிரிஜ்காட்டில் உள்ள ஒரு விருந்தினர் இல்லத்திற்கு (Guest House) அருகில் சென்று பார்த்தபோது, அஜய் அங்கிருந்த ஒரு கடையில் இரண்டு பிளேட் ‘சோலே பட்டூரே’ பார்சல் வாங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மனைவி அவரை உடனடியாகச் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்கவே, நடுரோட்டில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் தொடங்கியது. அஜய் வேறொரு பெண்ணைச் சந்திப்பதற்காகவே உணவை பார்சல் வாங்குகிறார் என்று மனைவி குற்றம் சாட்ட, அந்த இடத்தில் பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர்.

Advertisement

இருப்பினும், அஜய் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, தான் எந்தப் பெண்ணையும் சந்திக்க வரவில்லை என்றும், வீட்டில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே தனியாக இங்கு வந்ததாகவும் கூறினார். அதற்கு, “நீ தனியாக வந்திருந்தால் எதற்காக இரண்டு பிளேட் சோலே பட்டூரே பார்சல் வாங்கினாய்?” என்று மனைவி கேள்வி எழுப்பியதால் அங்குத் தகராறு தீவிரமடைந்தது. இறுதியாக, இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த பிரிஜ்காட் காவல் சாவடிக்கு இரு தரப்பினரும் அழைத்துச் செல்லப்பட்டனர்; அங்குப் போலிஸார் இரு தரப்பாரையும் சமாதானப்படுத்திப் பேசி முடித்து வைத்ததைத் தொடர்ந்து கணவனும் மனைவியும் வீட்டிற்குத் திரும்பினர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in