“இடைத்தேர்தல்ல க்ளீன் ஸ்வீப் கன்பார்ம்…” அம்புட்டு தொகுதியையும் தூக்க போவது யார்? அமைச்சர் விஸ்வநாதன் ஓபன் டாக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இடைத்தேர்தல்ல க்ளீன் ஸ்வீப் கன்பார்ம்…” அம்புட்டு தொகுதியையும் தூக்க போவது யார்? அமைச்சர் விஸ்வநாதன் ஓபன் டாக்..!!

Published

on

வரும் இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தப்பித்துக் கொள்ள பார்க்கிறார். திமுக இழந்த ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள பார்க்கிறது. இவை இரண்டுமே கடினமானது என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் விசுவநாதன் டெல்லியில் இருந்து இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார்.

அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும், தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி, அமோக வெற்றி பெறும். இந்த இரு தொகுதிகளிலும் போட்டி என்பது கேள்விக்கே இடமில்லாத ஒன்றாக உள்ளது. தாராபுரத்திலும், மதுராந்தகத்திலும் ஒரு க்ளீன் ஸ்வீப் வெற்றி கிடைக்கும் என்றார்.

Advertisement

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி ஆட்சிக்கு, மக்கள் தரும் அங்கீகாரமாகவே இந்த தேர்தல் முடிவு அமையும். தமிழகத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அமைந்துள்ள ஒரு கூட்டணி அரசுக்கு, மக்கள் நலத் திட்டங்களுக்காக, மக்கள் அளிக்கும் அங்கீகாரமாகத்தான் இந்தத் தேர்தலை பார்க்கிறேன். தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் மிகச் சிறந்த வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். இதில் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. தேர்தல் அரசியல் என்பது வேறு. அதில் ஒரு கட்சித் தலைவர்கள், மற்றொரு கட்சித் தலைவர்களை, மாறி மாறி தங்களது கருத்துகளைச் சொல்வதும், அதற்கு பதில் சொல்வதும் இயல்பான நிலவரங்கள்தான். இதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை என அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in