CRIME
“அடச்சீ.. பெற்ற மகள் மீதே கை வச்ச மிருகம்..” அடுத்த நொடியே மனைவி செய்த கொடூர காரியம்… ரத்த வெள்ளத்தில் சரிந்த கணவன்.. பெரும் பரபரப்பு சம்பவம்..!!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் அல்வால் பகுதியில் உள்ள பெத்தி பத்மாரெட்டி காலனியில் நடந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஸ்ரீனிவாஸ் என்ற நபர், தனது சொந்த வீட்டிலேயே பெற்ற மகள் என்றும் பாராமல் அவரிடம் தவறான முறையில் நடந்து கொண்டு, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்தத் துரோகத்தை அறிந்த அவரது மனைவி, தன் மகளைச் சீரழிக்க முயன்ற கணவன் இந்த பூமியில் ஒரு நொடி கூட வாழத் தகுதியற்றவன் என ஆத்திரமடைந்து, கோடாரியால் அவரை வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இந்தத் தீவிரக் கொலைச் சம்பவம் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட தாய், மகள் மற்றும் மகன் ஆகிய மூவரையும் அல்வால் போலீஸார் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கொலையின் பின்னணி மற்றும் குடும்பத்தினரின் கூட்டுச் சதி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
