“மாசம் ரூ.2600 கேக்குறாங்க” அலுவலகத்திலேயே லஞ்சம் வாங்கும் பெண் அதிகாரி… அங்கன்வாடி ஊழியரின் பகீர் புகார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மாசம் ரூ.2600 கேக்குறாங்க” அலுவலகத்திலேயே லஞ்சம் வாங்கும் பெண் அதிகாரி… அங்கன்வாடி ஊழியரின் பகீர் புகார்..!!

Published

on

பீகார் மாநிலம் சுபௌல் மாவட்டம் சாதாபூர் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் (ICDS) அலுவலகத்தில் பணிபுரியும் பெண் மேற்பார்வையாளர் ஒருவர், அங்கன்வாடி மையங்களில் இருந்து மாதம் ₹2,600 லஞ்சமாகப் பெறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது . ஜீவிக்பூர் பஞ்சாயத்து அங்கன்வாடி ஊழியரான மம்தா குமாரி, பராமரிப்புச் சீட்டுகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை ஒப்புதல் அளிக்க இந்தத் தொகை கேட்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார் . மேலும், இரண்டு மாத சீட்டுகளை அனுமதிப்பதற்கு கூடுதலாக ₹10,000 கேட்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்

இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது . அதில், அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் பெண் மேற்பார்வையாளர் சங்கீதா குமாரி பணத்தைக் எண்ணுவது போன்றும், அதில் ₹200 குறைவாக இருப்பதாகப் பேசுவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன . இந்த வீடியோவை மம்தா குமாரி தனது கணவர் மூலம் ரகசியமாகப் படம் பிடித்ததாகக் கூறியுள்ள நிலையில், வீடியோவை நீக்குமாறு அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Advertisement

இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மேற்பார்வையாளர் சங்கீதா குமாரி முற்றிலுமாக மறுத்துள்ளார் தனக்கு சொந்தமான மருந்தகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய மருந்துகளுக்கான பாக்கித் தொகையான ₹2,600-ஐத் தரவே அலுவலகத்திற்கு வந்தாரெனவும், அதை தவறாகச் சித்தரித்து வீடியோவை வைரலாக்கி விட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார் . இச்சம்பவம் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளின் முறையான விசாரணைக்குப் பிறகே உண்மை நிலை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in