ஸ்டாலின் அங்கிள்.. அவன் இவன்னு ஒருமையில் பேசுறது… ஆபாச நதியையும் கையில் எடுத்துக்கொண்டு.. மேடையில் வெளுத்துவாங்கிய முதல்வர் விஜய்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்டாலின் அங்கிள்.. அவன் இவன்னு ஒருமையில் பேசுறது… ஆபாச நதியையும் கையில் எடுத்துக்கொண்டு.. மேடையில் வெளுத்துவாங்கிய முதல்வர் விஜய்..!

Published

on

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார் . அப்போது மேடையில் பேசிய அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னை “அவன், இவன்” என ஒருமையில் பேசி வருவதாகக் குற்றம் சாட்டினார். நாம் அவரை எப்போதுமே மரியாதையுடன் தான் நடத்தி வருகிறோம் என்றும், ஆனால் அவர் இன்று நாகரிகம் இன்றி ஒருமையில் பேசி வருவதாகவும் விஜய் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், திமுகவினர் வன்ம நதியையும், ஆபாச நதியையும் கையில் எடுத்துக்கொண்டு மிகவும் கொச்சையாகப் பேசி வருவதாகக் சாடினார். தங்களுக்குச் சாதகமாகத் தங்களின் கட்சிக்காரர்களை ஏவிவிட்டு, எனக்கு எதிராக மேடைகளில் ஒருமையில் பேச வைக்கிறார்கள் என்று வேதனை தெரிவித்தார். இத்தகைய தரக்குறைவான விமர்சனங்களுக்கு மத்தியில், தவெக தொண்டர்களை நோக்கி “நீங்கள் எப்போதும் நாகரிகமாக, நன்றாகப் பேசுங்கள்” என்று அறிவுறுத்தினார்.

Advertisement

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்த விஜய், தங்களைப் பொறுத்தவரை திமுகவும், அதிமுகவும் ஒன்றுதான் என்று திட்டவட்டமாகக் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in