LATEST NEWS
BREAKING: அதிமுகவில் இருந்து விலகினார் மாஜி MLA முருகுமாறன்..! இபிஎஸ்-க்கு விழுந்த மரண அடி..!!
அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முருகுமாறன், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வகுத்தளித்த நெறிமுறைகளிலிருந்து தற்போதைய தலைமை தடம் மாறிச் செல்வதாகவும், இதனால் மிகுந்த மனவேதனையுடனும் வலியோடும் இக்கடினமான முடிவை எடுப்பதாகவும் தெரிவித்து, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2011 மற்றும் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், 2021-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதே தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கடந்த தேர்தலில் திட்டக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
