CRIME
அடப்பாவமே.. சண்டையை விளக்கப்போன போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்.. நடுரோட்டில் மதுபோதையில் ஆக்ரோஷமாக மாறிய கும்பல்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
பெங்களூரு ஊரக மாவட்டம் தொட்டபல்லாப்பூரின் பாலனஜோகிஹள்ளியில், தகராறைத் தடுக்க முயன்ற இரண்டு போலீஸ்காரர்கள் இருவரால் தாக்கப்பட்டனர். இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மணிகண்டா மற்றும் ராயப்பா பூஜாரி ஆகியோரே காயமடைந்த போலீஸ் ஊழியர்கள் ஆவர். இவர்கள் 112 அவசர உதவிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதும், அப்பகுதியில் இரவு நேரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார், அங்கு இரண்டு நபர்கள் மதுபோதையில் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டனர். அவர்களை சமாதானப்படுத்த முயன்றபோது, அந்த நபர்கள் ஆக்ரோஷமாக மாறி போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் நெஞ்சு, கைகள் மற்றும் கால்களில் காயமடைந்த இரண்டு அதிகாரிகளும் சிகிச்சைக்காக தொட்டபல்லாப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஹரஹன் சரிஹன் மற்றும் பஷீர் ஆகிய இருவரை தொட்டபல்லாப்பூர் ஊரக காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர். ஆரம்பத்தில் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்ட இவர்கள், பின்னர் தடுக்க வந்த போலீஸாரைத் தாக்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
