LATEST NEWS
“பெத்தவங்களுக்குத் தெரியாம ஒரு வாழ்க்கை..?” கடைசியில் உயிரே போச்சு.. இன்ஸ்டாகிராமில் தொடங்கிய ரகசிய காதல்… ‘லிவ்-இன்’ உறவில் இருந்த இளம்பெண் திடீர் மரணம்..! பின்னணியில் நடந்தது என்ன..?!
மகாராஷ்டிர மாநிலம் கல்யாணைச் சேர்ந்த 26 வயதான அஞ்சலி கோதேஸ்வர், டெல்லியில் தங்கி போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதாகத் தனது குடும்பத்தினரிடம் கூறி வந்துள்ளார். அங்குதான் இருப்பதாகச் சில புகைப்படங்கள் மற்றும் தகவல்களையும் குடும்பத்தினருடன் பகிர்ந்து வந்துள்ளார். ஆனால், உண்மையில் அவர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான சிஐஎஸ்எஃப் வீரர் ஒருவருடன் குடும்பத்தினருக்குத் தெரியாமல் வேறொரு இடத்தில் ‘லிவ்-இன்’ உறவில் தங்கியிருந்துள்ளது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், அஞ்சலி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உண்மையான வாழ்க்கைச் சூழல் குறித்து எதுவும் தெரியாமல் இருந்த அஞ்சலியின் குடும்பத்தினருக்கு, இந்த மரணச் செய்தி பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சமூக வலைதளத்தில் தொடங்கிய நட்பு, லிவ்-இன் உறவாக மாறி தற்போது அஞ்சலி உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சலி எப்படி உயிரிழந்தார், மரணத்துக்கு முன்பாக என்ன நடந்தது மற்றும் அவர் யாருடன் தங்கியிருந்தார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஞ்சலியின் மரணம் இயல்பானதா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது. காவல் துறையினரின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் தடயவியல் முடிவுகளின் அடிப்படையிலேயே மரணத்துக்கான முழுமையான காரணம் வெளிவரும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
