“எங்க ஐஐடி தகுதிக்கே உன்னால வர முடியாது!.. இந்திய பேராசிரியரை கிண்டல் செய்த அமெரிக்கர்… தரவுகளோடு நெட்டிசன்ஸ் கொடுத்த தரமான பதிலடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்க ஐஐடி தகுதிக்கே உன்னால வர முடியாது!.. இந்திய பேராசிரியரை கிண்டல் செய்த அமெரிக்கர்… தரவுகளோடு நெட்டிசன்ஸ் கொடுத்த தரமான பதிலடி..!!

Published

on

சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், இந்தியாவின் புகழ்பெற்ற ஐஐடி நிறுவனத்தையும், அங்கு படித்து தற்போது அமெரிக்காவின் மொண்டானா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் வேளாண் செயல்முறைப் பொறியியல் உதவி பேராசிரியராகப் பணியாற்றி வரும் டாக்டர் ஷிவாலி பானர்ஜி என்பவரையும் கேலி செய்யும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். @Oilfield_Rando என்ற கணக்கைக் கொண்ட அந்த நபர், அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இந்தியப் பேராசிரியர்களின் பட்டியலைப் பகிர்ந்து, இந்தியர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக இனவெறி உணர்வுடன் டாக்டர் பானர்ஜியின் தகுதியையும் கேள்வி எழுப்பினார்.

இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் அந்த அமெரிக்க நபருக்குத் தரவுகளுடன் தகுந்த பதிலடி கொடுக்கத் தொடங்கினர். ஐஐடி என்பது உலகிலேயே மிகக் கடினமான மற்றும் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் ஒன்று என்றும், ஐஐடியில் சேர்வதற்கான சேர்க்கை விகிதம் 0.5% முதல் 1% வரை மட்டுமே, இது ஹார்வர்ட் மற்றும் எம்.ஐ.டி போன்ற அமெரிக்க நிறுவனங்களை விடவும் மிகக் கடினமானது என்றும் சுட்டிக்காட்டினர். தரவு விஞ்ஞானி அர்மாண்ட் டொமாலெவ்ஸ்கி போன்றோர், “ஆசியாவின் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில் படித்த ஒரு பேராசிரியர் அமெரிக்காவில் கற்பிப்பது அமெரிக்காவிற்குப் பெருமைக்குரிய விஷயம்” எனக் கூறி அவருக்குப் பதிலடி கொடுத்தனர்.

Advertisement

விஷயம் தீவிரமடைந்து சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, அந்த அமெரிக்க நபர் தன் தவறை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக இந்தியாவுக்கு எதிராக மேலும் அவதூறானக் கருத்துகளைப் பதிவிட்டார். “தம்மை மிகச் சிறந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாட்டினர் வாழும் நாடு ஒரு நரகம் போன்றது” என்று மீண்டும் இனவெறியைத் தூண்டும் வகையில் அவர் கருத்துத் தெரிவித்தார். இதனால் கோபமடைந்த இணையவாசிகள், அவரது குறுகிய மனப்பான்மையையும் இனவெறிச் சிந்தனையையும் மிகக் கடுமையாக விமர்சித்து மீண்டும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in