CRIME
“ஒன்றல்ல இரண்டல்ல.. மொத்தம் 1,400 கோழிகள் பலி..!” களத்தில் இறங்கிய கால்நடைத் துறை.. பின்னணியில் இருக்கும் பயங்கர உண்மை..!!
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள வஜ்ரகரூர் மண்டலத்திற்கு உட்பட்ட கடமலகுண்டா கிராமத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வார காலத்தில் மட்டும், இந்த கிராமத்தில் உள்ள பண்ணைகளில் சுமார் 1,400 கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. இந்த திடீர் மரணங்கள் அப்பகுதி மக்களிடையேயும், கோழிப் பண்ணையாளர்களிடையேயும் பெரும் அச்சத்தையும் கவலையையும் உண்டாக்கியுள்ளது. இதனையடுத்து இறந்த கோழிகளை பணியாளர் நெருப்பில் வீசினார்கள்.
கோழிகளின் தொடர் மரணத்தைத் தொடர்ந்து, விழித்துக்கொண்ட கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளும், மருத்துவ நிபுணர்களும் உடனடியாக கடமலகுண்டா கிராமத்திற்கு விரைந்தனர். அவர்கள் உயிரிழந்த கோழிகளை தீவிரமாக ஆய்வு செய்து, பறவைக் காய்ச்சல் பாதிப்பை உறுதிப்படுத்துவதற்காக ஆய்வக மாதிரிகளை சேகரித்துள்ளனர். நோய் மேலும் பரவாமல் தடுக்கவும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவும் அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
