LATEST NEWS
“டீச்சர் பாம்பு கடிச்சிருச்சு” அலறிய 5 வயது சிறுவன்.. அலட்சியமாக வீட்டிற்கு அனுப்பிய அங்கன்வாடி ஊழியர்… பரிதாபமாக பறிபோன உயிர்..!!
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள பார் (Badh) காவல் எல்லைக்கு உட்பட்ட போத்மா பர் என்ற கிராமத்தில், அங்கன்வாடி மையத்திற்குச் சென்ற 5 வயதான இஷு குமார் என்ற சிறுவன் பாம்புக் கடியால் உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. உணவு உண்ட பிறகு கை கழுவச் சென்ற சிறுவனை பாம்பு கடித்ததை அடுத்து, அவன் அங்கன்வாடி ஊழியரிடம் தகவலைத் தெரிவித்துள்ளான்.
ஆனால், அந்த அங்கன்வாடி ஊழியர் உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமலும் அல்லது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்காமலும், சிறுவனைத் தனியாக வீட்டிற்கு நடந்து செல்லுமாறு அலட்சியமாக அனுப்பியதாகப் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். சுமார் 50 மீட்டர் தூரம் தனியாக நடந்து வீட்டிற்கு வந்த சிறுவன், தாய் அவர்களிடம் பாம்பு கடித்த தகவலைக் கூறியுள்ளான்.
இதையடுத்து பதறிய பெற்றோர், ஆரம்பத்தில் மூடநம்பிக்கையால் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்று மந்திரிக்க முயன்றுள்ளனர். பின்னர் நிலமை மோசமடையவே அடுத்தடுத்து பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றபோதிலும், சிறுவனைக் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர். அங்கன்வாடி ஊழியர்களின் இத்தகைய கடும் அலட்சியப் போக்கே சிறுவனின் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் எனக் கூறி பெற்றோர் கடும் ஆத்திரமும் சோகமும் அடைந்துள்ளனர்.
