“அடக்கொடுமையே..! பாம்புப் பல்லை உடைக்கப்போய் இப்படி ஆகிடுச்சே..” மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தைக்கு நேர்ந்த பரிதாப முடிவு… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடக்கொடுமையே..! பாம்புப் பல்லை உடைக்கப்போய் இப்படி ஆகிடுச்சே..” மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தைக்கு நேர்ந்த பரிதாப முடிவு… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் விஷப்பாம்புடன் சாகசம் காட்டுவது தந்தை மற்றும் மகனின் உயிருக்கே ஆபத்தாக முடிந்துள்ளது. சத்தாரிக் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முனக்கிப்புர்வா கிராமத்தில் அமைந்துள்ள துர்கா பூஜை பந்தல் முன்பு, பாம்புப் பற்களை உடைக்கும் கலையைக் காட்டிய 26 வயதான நௌமிலால் என்பவரை நாகப்பாம்பு கடித்துள்ளது. தனது மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை மகேஷையும் அந்தப் பாம்பு கடித்தது. உடனடியாக இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் அவர்களது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்தச் சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முனக்கிப்புர்வா கிராமத்தில் வசிக்கும் மகேஷ் மற்றும் அவரது மகன் நௌமிலால் ஆகியோருக்கு பாம்புகளைப் பிடிக்கும் வழக்கம் இருந்துள்ளது. நௌமிலால் பொதுமக்களின் வீடுகளிலிருந்து பாம்புகளைப் பிடித்து வந்துள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவன்று கிராமத்திற்கு அருகில் உள்ள பூஜை பந்தலுக்கு, தோட்டத்தில் பிடிக்கப்பட்ட விஷமுள்ள கறுப்பு நாகத்துடன் அவர் சென்றுள்ளார். அங்கு பொதுமக்களுக்கு முன்பாக பாம்பைக் கொண்டு சாகசம் காட்டியுள்ளார். அப்பொழுது நாகப்பாம்பின் விஷப் பற்களை உடைக்கும் சோதனையைச் செய்ய முயன்றபோது, அவரது பிடி தளர்ந்து பாம்பு கையைவிட்டு நழுவி அவரது காலில் கடித்துவிட்டது.

Advertisement

மகனைக் காப்பாற்ற ஓடிவந்த தந்தையையும் பாம்பு கடித்ததுடன், இருவரும் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். நௌமிலாலின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் அவருக்கு 20 முறை நச்சுமுறிவு மருந்துகள் செலுத்தப்பட்ட போதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் அவரது பார்வை மங்கி, பேசும் திறனும் இழக்கப்பட்டது. தொடர்ந்து லக்னோவில் உள்ள ட்ரௌமா மையத்திற்கு மாற்றப்பட்ட நிலையிலும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தந்தை மகேஷும் உயிரிழந்ததுடன், அவர்களது வீட்டில் பல பாம்புகள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in