“யாருக்காக மராத்தான் ஓடினார் முதலமைச்சர்..?” சர்வதேச போதைப்பொருள் விவகாரத்தில் விஜய் மீது EPS சாட்டையடி… பற்றி எரியும் அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“யாருக்காக மராத்தான் ஓடினார் முதலமைச்சர்..?” சர்வதேச போதைப்பொருள் விவகாரத்தில் விஜய் மீது EPS சாட்டையடி… பற்றி எரியும் அரசியல் களம்..!!

Published

on

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ள விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் மவுன சாமியாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மக்களின் முக்கியப் பிரச்சினைகள் குறித்துப் பேசும்போது முதலமைச்சர் எப்படி அமைதியாக இருப்பாரோ, அதேபோல்தான் தற்போதைய போதைப்பொருள் விவகாரத்திலும் அவர் மவுனம் காத்து வருவதாக இபிஎஸ் சாடியுள்ளார். தனது X பதிவில், ஆளுங்கட்சியின் பின்னணியில் இவ்வளவு பெரிய சர்வதேச போதைப்பொருள் மாஃபியா நெட்வொர்க் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, முதலமைச்சர் யாருக்காக மராத்தான் ஓடிக்கொண்டிருந்தார் என்று ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய பூபாலன் போன்ற ஆளுங்கட்சி பிரமுகர்களின் பின்னணி குறித்து முதலமைச்சர் விஜய் ஒரு விளக்கமாவது அளிப்பாரா என்றும் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, இளைஞர்களின் எதிர்காலம் போதைப்பொருட்களால் பாழாகி வரும் வேளையில், பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் முதலமைச்சர் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச அளவில் தொடர்புகளைக் கொண்ட இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் செயல்பாடுகள் குறித்தும், அதில் ஆளுங்கட்சியினருக்கு இருக்கும் தொடர்பு குறித்தும் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தனது பதிவின் மூலம் டிமாண்ட் செய்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in