“10 வருஷ பாசம் சும்மா இல்ல…” செல்லநாய் மரணம்.. பலகோடி செலவழித்து லண்டன் வாலிபர் செய்த நெகிழ்ச்சி காரியம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!1 – cinefeeds
Connect with us

LATEST NEWS

“10 வருஷ பாசம் சும்மா இல்ல…” செல்லநாய் மரணம்.. பலகோடி செலவழித்து லண்டன் வாலிபர் செய்த நெகிழ்ச்சி காரியம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!1

Published

on

காஞ்சிபுரத்தில் லண்டன் வாலிபர் ஒருவர், தான் உயிருடன் வளர்த்த செல்ல நாய் இறந்த செய்தி கேட்டு பல லட்சம் ரூபாய் செலவு செய்து தாயகம் திரும்பி கண்ணீர் அஞ்சலி செலுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் பழனி ராஜின் மகன் லோகேஷ், லண்டனில் பணிபுரிந்து கொண்டே மேல் படிப்பும் படித்து வருகிறார். இவர்களது குடும்பத்தினர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ‘வீரூ’ என்ற உயர்ரக நாயை தங்களின் மற்றொரு மகனைப் போல பாசத்துடன் வளர்த்து வந்தனர்.

திடீர் உடல்நலக் குறைவால் அந்த நாய் உயிரிழந்ததை அடுத்து, லண்டனில் இருந்து அவசரமாக சென்னை திரும்பிய லோகேஷ், தன் செல்லப் பிராணிக்கு மனிதர்களுக்கு செய்வது போல சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்தார். லோகேஷ் வரும் வரை அவரது குடும்பத்தினர் நாயின் உடலை ஃப்ரீசர் பாக்ஸில் வைத்து அஞ்சலி செலுத்தி வந்தனர். சொந்த பந்தங்கள் இறந்தாலே வெளிநாட்டில் இருந்து வர யோசிக்கும் இந்த காலத்தில், வளர்த்த நாய்க்காக சிரமங்களை பொருட்படுத்தாமல் லண்டனில் இருந்து வந்து அஞ்சலி செலுத்திய வாலிபரின் செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in