“ரயிலில் சில வாலிபர்கள் அசிங்கமாக நடந்துகிறாங்க…” நள்ளிரவில் நண்பனிடம் போனில் கதறிய மாணவி.. அடுத்த சில மணி நேரத்தில் நடந்த பயங்கரம்.. பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ரயிலில் சில வாலிபர்கள் அசிங்கமாக நடந்துகிறாங்க…” நள்ளிரவில் நண்பனிடம் போனில் கதறிய மாணவி.. அடுத்த சில மணி நேரத்தில் நடந்த பயங்கரம்.. பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே, அசாம் மாநிலம் குவஹாத்தியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்து கிடந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. குவஹாத்தியில் உள்ள பி. போருவா கல்லூரியில் படித்து வந்த இமாஸ்ரீ போரோ என்ற அந்த மாணவி, விசாகப்பட்டினத்தில் இருந்து குவஹாத்தி நோக்கி ரயிலில் பயணம் செய்துள்ளார். அக்டோபர் 6-ஆம் தேதி அதிகாலை 2:39 மணியளவில் தனது நண்பரைத் தொடர்புகொண்ட இமாஸ்ரீ, ரயிலில் இருந்த சில இளைஞர்கள் தன்னிடம் தவறாக நடந்துகொள்வதாகவும், வம்பிழுப்பதாகவும் கூறி அழுதுள்ளார். அதன் பிறகு திடீரென அழைப்பு துண்டிக்கப்பட்டதுடன், அவரது தொலைபேசியும் அணைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, டிக்குலம்பூர் என்ற இடத்திற்கு அருகே உள்ள ரயில் தண்டவாளப் பகுதியில் இமாஸ்ரீயின் உடலை ரயில்வே போலீஸார் கண்டெடுத்துள்ளனர். இமாஸ்ரீயின் மரணம் குறித்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ரயிலில் பயணித்ததற்கான சிசிடிவி காட்சிகளை போலீஸார் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்தும், அவரிடம் தவறாக நடந்துகொண்ட நபர்கள் யார் என்பது குறித்தும் பல கோணங்களில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in