LATEST NEWS
“நெஞ்சே நடுங்குது.. ஓடும் காரில் கிளம்பிய கரும்புகை..” கண் இமைக்கும் நேரத்தில் கொழுந்துவிட்டு எரிந்த கார்.. அடுத்த நொடியே ஓட்டுநர் செய்த அதிரடி காரியம்.. அதிர்ச்சி வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள ஹசன்பூர்-சம்பல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, திடீரென ஓடும்போதே தீப்பிடித்து எரிந்து சாம்பலான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அதன் எஞ்சின் பகுதியிலிருந்து கரும்புகை கிளம்பியுள்ளது. நொடிப் பொழுதில் கார் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கிய நிலையில், காரை ஓட்டி வந்த ஓட்டுநர் சமயோசிதமாகச் செயல்பட்டு ஓடும் காரிலிருந்து வெளியே குதித்துத் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்.
காரில் பற்றிய தீ கண் இமைக்கும் நேரத்திற்குள் கொழுந்துவிட்டு எரிந்து, ஒட்டுமொத்த காரையும் ஒரு நெருப்புப் பந்தாக மாற்றியது. இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் அதற்குள்ளாகவே கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்தத் தீ விபத்துக்கான துல்லியமான காரணம் என்னவென்று தெரியாத நிலையில், முதற்கட்டமாக எஞ்சினில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
