ஐயோ பாவம்..! பறந்து வந்த லாரி.. துடிதுடித்து நசுங்கிப் போன 25 உயிர்கள்..! கதறும் உரிமையாளர்… தேசிய நெடுஞ்சாலையில் அரங்கேறிய கோர விபத்து..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஐயோ பாவம்..! பறந்து வந்த லாரி.. துடிதுடித்து நசுங்கிப் போன 25 உயிர்கள்..! கதறும் உரிமையாளர்… தேசிய நெடுஞ்சாலையில் அரங்கேறிய கோர விபத்து..!!

Published

on

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மாலியா பகுதியில், கன்ட்லா – மோர்பி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற ஆட்டு மந்தையின் மீது அதிவேகமாக வந்த சரக்கு லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது. அக்டோபர் 7 அன்று நிகழ்ந்த இந்த கோர சம்பவத்தில், சாலையோரமாகச் சென்றுகொண்டிருந்த கால்நடைகள் லாரியின் சக்கரங்களில் சிக்கி நசுங்கின.

இந்த விபத்தின் தாக்கத்தால் 23 செம்மறி ஆடுகள் மற்றும் 2 வெள்ளாடுகள் என மொத்தம் 25 கால்நடைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. அத்துடன் 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயமடைந்த நிலையில், விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in