LATEST NEWS
“யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..”தவெக-வை முந்தி அதிமுக வேட்பாளர் பானுமதி முதலிடம்.. வாக்கு எண்ணிக்கையில் பதற்றம்..!!
தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், அதிமுக வேட்பாளர் பானுமதி முதலிடத்திற்கு முன்னேறி முன்னிலை பெற்றுள்ளார்.வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது அதிமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருந்தது. ஆனால், தொடர்ந்து நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிரடித் திருப்பமாக அதிமுக வேட்பாளர் பானுமதி 6,506 வாக்குகள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இரண்டாம் சுற்று முடிவுகளின் நிலவரப்படி, அதிமுகவிற்கு அடுத்தபடியாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா 6,456 வாக்குகள் பெற்று மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் தீவிரப் போட்டியில் உள்ளார்.ஆளுங்கட்சியான திமுகவின் வேட்பாளர் சுகன்யா 4,995 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா 352 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சுமணன் 160 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்தத் தாராபுரம் தேர்தல் களம் தற்போதைய நிலவரப்படி அதிமுக மற்றும் தவெக இடையே மிகக் கடுமையான நேரடிப் போட்டியாக மாறியுள்ளது.
