LATEST NEWS
“மரண மாஸ் ட்விஸ்ட்..!” திமுக-வை 3,238 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நோக்கிப் பாயும் தவெக… அதிரும் தேர்தல் களம்..!!
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், ஆரம்பம் முதலே தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் மரகதம் குமரவேல் தொடர்ந்து அதிரடியாக முன்னிலை வகித்து ஆளுங்கட்சிக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தவெக வேட்பாளர் தனது பலத்தை நிரூபித்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள 3-வது சுற்று முடிவுகளின்படி அவர் 12,197 வாக்குகள் பெற்று முதலிடத்தில் மிக வலுவாகக் கால்பதித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஆளுங்கட்சியான திமுகவின் வேட்பாளர் பரந்தாமன் 8,959 வாக்குகள் மட்டுமே பெற்று இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
தற்போதைய 3-வது சுற்று நிலவரத்தின்படி, திமுக வேட்பாளரை விட சுமார் 3,238 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் மிகத் தெளிவாக வெற்றியை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறார். இவர்களுக்கு அடுத்தபடியாக அதிமுகவின் வேட்பாளர் கணிதா சம்பத் 6,906 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். தேர்தல் களம் தொடங்கியதில் இருந்தே தவெக இந்தத் தொகுதியில் காட்டி வரும் ஆதிக்கம் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், மதுராந்தகத்தில் தவெகவின் கொடி பறப்பதற்கான சாத்தியக்கூறுகளை மிக அதிகப்படுத்தியுள்ளது.
