LATEST NEWS
தலைநகரில் உச்சக்கட்ட பதற்றம்..! 57 மெட்ரோ நிலையங்கள் மூடல்.. 35 எக்ஸ்பிரஸ் ரயில்கள் திடீர் ரத்து..டெல்லியை உலுக்கப்போகும் மாபெரும் போராட்டம்..!!
டெல்லியில் நாளை நடைபெறவுள்ள பிரம்மாண்ட போராட்டத்தைத் தடுக்கும் நோக்கில், டெல்லி மெட்ரோவின் 57 முக்கிய ரயில் நிலையங்கள் இன்றிரவு 9 மணி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை அதிரடியாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, சி.ஜே.பி அமைப்பு நாளை டெல்லியில் ஒரு மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அதிரடிப் போராட்டத்தின் காரணமாகத் டெல்லிக்குள் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்க்கவும், குறிப்பாகப் போராட்டக் களங்களில் இளைஞர்கள் பெருமளவில் திரண்டு கூடுவதைத் தடுப்பதற்காகவும் மத்திய அரசும் டெல்லி மெட்ரோ நிர்வாகமும் இணைந்து இந்த அவசரக் கட்டுப்பாட்டு உத்தரவை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மெட்ரோ சேவைகள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரவிருந்த 35 எக்ஸ்பிரஸ் ரயில்களையும் வடக்கு ரயில்வே நிர்வாகம் ஒட்டுமொத்தமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. நாளை டெல்லி நோக்கிப் போராட்டக்காரர்கள் பல்வேறு வழிகளில் நுழைவதைத் தடுப்பதற்காக இந்த கடுமையான இரயில் போக்குவரத்து முடக்கம் செய்யப்பட்டுள்ளது. திடீரென மெட்ரோ நிலையங்கள் மூடப்படுவதாலும், தூரப் பகுதி ரயில்கள் ரத்து செய்யப்படுவதாலும் இன்றிரவு டெல்லிக்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், தினசரிப் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். டெல்லியின் முக்கிய எல்லைப் பகுதிகள் மற்றும் ரயில் நிலையங்களைச் சுற்றிப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, தலைநகரம் முழுவதும் தற்பொழுது உச்சக்கட்டப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
