CRIME
“இங்க சில பசங்க என்னிடம் அத்துமீறுகிறாங்க..” நள்ளிரவு 2:39 மணிக்கு வந்த ‘அந்த’ கடைசி போன் கால்.. ரயிலில் கல்லூரி மாணவி கதறிய மரண ஓலம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இமாஸ்ரீ போரா என்ற கல்லூரி மாணவி, தனது தேர்விற்காக ரயிலில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு 2:39 மணிக்குத் தனது நண்பரைத் தொடர்புகொண்டு பயத்துடன் பேசியதே அவரது கடைசி அழைப்பாக மாறியுள்ளது. ரயிலில் ஏறிய சில நிமிடங்களிலேயே தனது நண்பரை அழைத்த இமாஸ்ரீ, “இங்கே சில இளைஞர்கள் என்னைத் துன்புறுத்துகிறார்கள், நான் பாதுகாப்பாக இல்லை” என்று பாலியல் தொல்லை குறித்துக் கதறியுள்ளார். பதறியடித்த அவரது நண்பர் உடனடியாக ரயில்வே உதவி எண்களை அழைத்துப் புகார் அளித்தும், சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்புப் படையினரின் அலட்சியத்தால் அந்த மாணவிக்கு எந்த உதவியும் சரியான நேரத்தில் கிடைக்கவில்லை.
மறுநாள் கௌஹாத்தி ரயில் நிலையத்தில் அந்த மாணவியின் பை மட்டுமே கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர் ரயிலில் இருந்து குதித்தாரா அல்லது தூக்கி வீசப்பட்டாரா என்ற பல்வேறு முரண்பட்ட தகவல்கள் சக பயணிகளிடம் இருந்து வெளியாகி பெரும் மர்மத்தை ஏற்படுத்தின. எல்லை வரம்பு என்ற பெயரில் காவல்துறையினர் காலம் தாழ்த்தியதால், இமாஸ்ரீயின் குடும்பத்தினர் காவல் நிலையங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். இறுதியில், பல நாட்களுக்குப் பிறகு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு ரயில் தண்டவாளம் அருகே அந்த மாணவியின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது. பாதுகாப்பு அமைப்பின் மிக மோசமான அலட்சியத்தாலும், கேளாமல் போன அந்தப் பெண்ணின் மரண ஓலத்தாலும் மற்றுமொரு அப்பாவி உயிர் பறிபோயுள்ளது, ரயில் பயணங்களில் பெண்களுக்கு என்றுமே பாதுகாப்பு இல்லையா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
