LATEST NEWS
காலையிலே ஷாக்..! தவெக-வுக்கு தாவும் அனிதா ராதாகிருஷ்ணனின் வலதுகரம்..? விஜய்யுடன் போஸ்டர் ஒட்டி திமுக-வுக்கு அதிர்ச்சி..!!
திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் பில்லா ஜெகன், தமிழக வெற்றி கழகத்தில் மீண்டும் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், தூத்துக்குடி நகரின் பல்வேறு இடங்களில் தவெக தலைவர் விஜய்யுடன் பில்லா ஜெகன் இருக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, விஜய் மக்கள் இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாகவும், பின்னர் தவெக தொடங்கப்பட்டபோது அதன் தூத்துக்குடி மாவட்ட செயலாளராகவும் பில்லா ஜெகன் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் தொடர்ந்து திமுகவிற்கு ஆதரவாகவும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நெருக்கமாகவும் செயல்பட்டு வந்ததால், கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் தவெக தலைமை அவரை கட்சியிலிருந்து நீக்கியது. அதனைத் தொடர்ந்து அவர் திமுகவில் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், தற்போது திமுகவிலிருந்து விலகி அவர் மீண்டும் தவெகவில் இணைய உள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தவெகவிலிருந்து நீக்கப்பட்ட ஒரு முக்கிய நிர்வாகி, மீண்டும் போஸ்டர்கள் அடித்து கட்சிக்குள் வர முயல்வது தூத்துக்குடி மாவட்ட அரசியலில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.
